பிரான்சில் மகனை காப்பாற்றுவதற்கு நகைகளை கொடுத்த தாய்..அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மகனை காப்பாற்றுவதற்கு நகைகளை கொடுத்த தாய்..அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம்

பிரான்சில் வீட்டின் உள்ளே நுழைந்த திருடன், வீட்டில் இருந்த சிறுவனை பிணைக்கைதியாக பிடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Saint-Lazare பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவு உள்ளூர் நேரப்படி 1 மணியளவில் உள்ளே நுழைந்த திருடன், சிறுவன் தூங்கிக் கொண்டிருந்த அறையில் நுழைந்துள்ளான்.

அப்போது பொருட்களை அவன் திருடுவதற்காக தேடிக் கொண்டிருந்த போது, பொருட்கள் கீழே விழுந்ததால், அதன் சத்தம் கேட்டு சிறுவன் கண் விழுத்துள்ளான்.

இதனால் வேறு வழி இல்லாமல் சிறுவனை பணயக் கைதியாக கழுத்தில் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு மிரட்டி சிறுவனின் தாயாரிடமிருந்த நகைகள் மற்றும் பணத்தினை திருடிச் சென்றுள்ளான்.

அதன் பின் இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அடுத்த சில நிமிடங்களில் அங்கு விரைந்த பொலிசார் திருடனை சுற்றி வைத்து பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து அவனை கைது செய்த பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers