மஞ்சள் மேலாடை போராட்டங்களை ஒடுக்க ராணுவம்! துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் நடைபெற்று வரும் மஞ்சள் மேலாடை போராட்டங்களில் வன்முறை அதிகரித்துள்ளதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம் களத்தில் இறக்கப்பட்டுள்து.

நவம்பரில் எரிவாயு வரி உயர்வைக் கண்டித்து தொடங்கிய மஞ்சள் மேலாடை போராட்டங்கள் இன்னும் தொடரும் நிலையில், அரசு அதிரடியாக போராட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.

பொதுச்சொத்துகளுக்கு கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டதையடுத்து பாரீஸ் உட்பட அனைத்து நகரங்களிலும் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் போராட்டக்காரர்கள் கையிலெடுக்கும் வன்முறை கைமீறிப்போயுள்ளதையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிசாருக்கு உதவியாக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிரடி நடவடிக்கையாக பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், துப்பாக்கிச்சூடு நடத்தவும் ராணுவத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers