பிரித்தானியா மக்களுக்கு எச்சரிக்கை! அதில் எந்த ஒரு நன்மையும் இல்லை; Brexit விவகாரம் குறித்து பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Santhan in பிரான்ஸ்

எந்த ஒரு உறுதியான ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது எங்களுக்கான நல்ல ஒரு அரசியல் அனுபவத்தை கொடுத்துள்ளது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் விவகாரத்தில் பிரதமர் தெரசா மே மும்முரமாக இறங்கி வருகிறார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய வெளியேறுவது குறித்து எம்.பிகளுடையே நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே இரண்டு முறை தோல்வியடைந்தார்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை Brussels நகரில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது நமக்கான நல்ல ஒரு அரசியல் அனுபவத்தை கொடுத்துள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றம் (வாக்கெடுப்பில்) அடுத்தவாரமும் Brexit-னை நிராகரிக்கவேண்டும்.

அதேவேளை, Brexit-னை ஆதரிக்கும் பிரித்தானிய மக்களுக்கான எச்சரிக்கையாக, இதில் எந்த நன்மைகளும் இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் உறுதியளிப்பது போல் எதுவும் நடக்காது.

உண்மையை பின்னர் தான் உணர்ந்துகொள்வீர்கள் எனவும் கடுமையாக சாடியுள்ளார். தவிர, பிரித்தானிய மக்கள் எங்கள் நண்பர்கள். அவர்களுக்கு எந்த முகமூடியையும் அணிந்து எங்களால் பார்க்கமுடியாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers