48 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய மாளிகையை இடிக்க நீதிமன்றம் உத்தரவு: பிரித்தானிய கோடீஸ்வரரின் பொறாமை காரணமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் 48 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஒரு பெரிய, அழகான மாளிகையை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Patrick Diter என்னும் பிரான்ஸ் நாட்டு வர்த்தகருக்கு சொந்தமான அந்த மாளிகை, பல பெரிய பணக்காரர்கள் திருமணங்கள் நடத்தும் இடமாகவும், பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக படப்பிடிப்பு நடத்தப்படும் இடமாகவும்கூட பிரபலமாக விளங்கியது.

ஆனால் அதை முறையான அரசு அனுமதியின்றி மீண்டும் புதுப்பித்ததற்காகவும், பாதுகாக்கப்பட்ட நிலத்தில் சாலை அமைத்ததற்காகவும் அதை இடிக்கும்படி பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இந்த பிரச்சினையின் பின்னால் இன்னொரு கதையும் உள்ளது.

Patrick Diterஇன் மாளிகையின் அருகில் Stephen மற்றும் அவரது மனைவி Caroline Butt என்னும் பிரித்தானிய கோடீஸ்வர தம்பதியரின் மாளிகை அமைந்திருக்கிறது. அவர்கள்தான் Diter மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள்.

14 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் தொடர்ந்த வழக்கில்தான், இப்போது, அந்த மாளிகையை இடிக்க வேண்டும் என தீர்ப்பு வந்திருக்கிறது.

ஒரு காலத்தில் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் நட்பாக இருந்ததாக தெரிவித்துள்ள Diter, தங்கள் மாளிகையை விட பெரிய மாளிகையை தான் கட்டியதால்தான் Caroline Butt பொறாமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் Caroline Butt, Diter விதிகளை மீறி செயல்பட்டதோடு தங்களை தங்கள் வீட்டிலேயே நிம்மதியாக வாழ முடியாமல் செய்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார்.

Diterஇன் தோட்டத்தில் 132 ஸ்பீக்கர்கள் இருப்பதாகவும், பார்ட்டி என்ற பெயரில் இரவு முழுவதும், விடியற்காலை 5 மணி வரையும் ஸ்பீக்கர்களை ஒலிக்கவிட்டு நிம்மதியாக தூங்கக்கூட விடாமல் செய்ததாகவும் குற்றம் சாட்டுகிறார்கள் Stephenம் அவரது மனைவி Caroline Buttம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்