கண்ணீர் விட்டு கதறியும் பிரான்சில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சாலையில் வீசியெறியப்பட்ட பிரித்தானிய இளம்பெண்ணின் இன்றைய நிலை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு செய்யும் ஆசையுடன் பிரான்ஸ் சென்ற ஒரு பிரித்தானிய இளம்பெண், கண்ணீர் விட்டு கதறியும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சாலையில் வீசியெறியப்பட்ட நிலையில், இன்று தன்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறார்.

ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு செய்ய வேண்டும் என்ற அதீத ஆசையில் பிரான்ஸ் புறப்பட்டார், பிரித்தானியாவைச் சேர்ந்த, சட்டம் பயின்ற Hannah Power (26) என்னும் அழகிய இளம்பெண்.

பனிச்சறுக்கு விளையாட்டை முடித்துவிட்டு, தான் தங்கியிருந்த தனது தோழியின் வீட்டைத்தேடி புறப்பட்ட Hannah, வழி தவறி வேறெங்கோ சென்று விட்டார்.

சுமார் 40 நிமிடங்கள் அலைந்தபின், கார் ஒன்று அவரை அணுக, அதிலிருந்த மூன்று ஆண்கள், Hannahவின் தோழியை தங்களுக்கு தெரியும் என்று கூறி, அவருக்கு லிப்ட் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் தன்னை அவர்கள் வேறெங்கோ அழைத்துச் செல்வதை உணர்ந்த Hannah, தன்னை விட்டு விடுமாறு கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறார்.

ஆனால் அவரது கதறலுக்கு செவிமடுக்காத அந்த நபர்கள் மறைவான ஒரு இடத்துக்கு கொண்டு சென்று அவளை வன்புணர்வுக்குள்ளாக்க முயன்றிருக்கிறார்கள்.

அந்த காரை ஓட்டிய நபர் Hannahவை வன்புணர்வு செய்ய, விடாமல் அவனை அடித்தும் குத்தியும் மிதித்தும் பயங்கரமாக போராடியிருக்கிறார் அவர்.

அதற்குள் மற்றவர்கள், தாங்கள் நினைத்தது அவ்வளவு எளிதில் நடந்து விடாது என்பதைப் புரிந்து கொண்டு, அவரது செல்போனைப் பிடுங்கிக் கொண்டு சாலையோரம் அவரை வீசிச் சென்றிருக்கிறார்கள்.

தட்டுத்தடுமாறி பொலிஸ் நிலையம் சென்ற Hannahவின் நிலைமையை அந்த பொலிசாரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஏதோ ஒரு குற்றம் நடந்துவிட்டது அவ்வளவுதான் என்பதுபோல் நடந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

தாக்குதலுக்குப்பின் மனச்சோர்வு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த Hannah, பின்னர் துணிந்து தன்னை வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொண்டு, தன்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிவு செய்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பலர் தன்னை தொடர்புகொள்வதாக தெரிவிக்கும் Hannah, அவர்கள் சோர்ந்து போகாமல், தன்னைப்போல் நடந்த சம்பாவிதத்திலிருந்து மீண்டு வெளிவர, தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து தன்னாலான உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers