பிரான்ஸ் முதியோர் இல்லத்தில் ஐந்து பேர் பரிதாபமாக பலி! சாலட் காரணமா: பொலிஸ் விசாரணை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் Toulouseஇல் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் 82 பேர் தங்கியுள்ள நிலையில், அவர்களில் 19 பேர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 19 பேர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிகிறது.

அந்த முதியோர் இல்லத்தில் 22 பேருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது.

இரவு உணவுக்குப்பின் பாதிக்கப்பட்ட அந்த 22 பேரில் ஐந்து பேர் இறந்து விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் உண்ட உணவு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களிடம் அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உணவுடன் கொடுக்கப்பட்ட சாலடில் பிரச்சினை இருக்கலாம் என உணவு உண்ட முதியவர்களின் பேத்தி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers