பிரான்சில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்-பெண் பொலிசார்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Avignon நகரில் இரு மாநகர காவல்துறை அதிகாரிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Avignon நகரில் காவல்துறை ஆண் அதிகாரி ஒருவரும், பெண் அதிகாரி ஒருவரும் நேற்றைய தினம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது.

அதன் பின்னர், 5.30 மணியளவில் அவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொலிசார் தரப்பில் கூறுகையில், இது தற்கொலையா அல்லது கொலைச் சம்பவமா?, இதில் மூன்றாம் நபர் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பதை தற்போது கூற முடியாது. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers