800,000 ருவாண்டா இனத்தவர் படுகொலையில் பிரான்சின் பங்கு: விசாரிக்க மேக்ரான் உத்தரவு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

25 ஆண்டுகளுக்கு முன் நடந்த ருவாண்டா இனப்படுகொலையில் பிரான்சின் பங்கு குறித்து விசாரிக்க ஒரு குழுவை பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் ஏற்படுத்தியுள்ளார்.

1994ஆம் ஆண்டு ருவாண்டா நாட்டின் சிறுபான்மையினரான துட்சி இனத்தவர்களில் பெரும்பாலானோர் ஹூட்டு இனத்தவரால் கொல்லப்பட்டனர்.

100 நாட்களில் இந்த கொடூர கொலைச்சம்பவத்தில் 800,000பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இந்த இனப்படுகொலையில் பிரான்சின் பங்கு இருப்பதாக ருவாண்டா குற்றம் சாட்டி வந்தது, பிரான்சும் தொடர்ந்து அதை மறுத்து வந்தது.

இனப்படுகொலைக்குமுன் ஹூட்டு இனத்தவரால் நடத்தப்பட்ட ருவாண்டா அரசில் அதிபராக இருந்தவர் Juvenal Habyarimana.

1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தலைநகரில் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதே இனப்படுகொலையைத் தூண்டியது.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு பயிற்சியளித்ததாகவும், எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்க தவறியதாகவும் ருவாண்டா பிரான்சை குற்றம் சாட்டியிருந்தது.

அதேபோல், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் பங்கு வகித்த பிரான்ஸ் படைகள் ஏற்படுத்தியிருந்த பாதுகாப்பான சூழலை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பியோடி விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

பல ஆண்டுகளாக இந்த பிரச்சினைகள் இரு நாடுகளுக்குமிடையில் உரசலை ஏற்படுத்தி வந்தாலும், சமீபகாலமாக மீண்டும் இரு நாடுகளின் உறவில் முன்னேற்றம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ருவாண்டா இனப்படுகொலையில் பிரான்சின் பங்கு குறித்து விசாரிப்பதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers