Brexit தொடர்பில் பிரான்சில் வசிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேறினாலும் பிரான்சில் வசிக்கும் பிரித்தானியர்கள் தங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமத்தை பிரான்சில் வாகனம் ஓட்ட பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரான்சில் வசிக்கும் பிரித்தானியர்களுக்கு நேற்று பிரான்ஸ் அரசு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டது.

நேற்று பிரான்ஸ் அரசு வெளியிட்ட அரசாணை ஒன்றில், நீங்கள் தொடர்ந்து பிரான்சில் வசிக்கும் பிரித்தானியர் (Normal residence) என்பதை நிரூபிக்க முடியுமானால், உங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து பிரான்சில் வாகனம் ஓட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

’Normal residence’ என்பதன் பொருள் என்னவென்றால், தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு (185 நாட்கள்) பிரான்சில் வசித்து வருபவர் என்பதாகும்.

இந்த பயன்பாடு, ஒப்பந்தங்கள் இன்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய அன்றைய நாளிலிருந்து அமுலுக்கு வரும்.

நீங்கள் இந்த categoryயில் வருவீர்களென்றால், உங்கள் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் நாள் வரை அல்லது அது தொலைந்து போகும் அல்லது திருடு போகும் நாள் வரை உங்கள் ஓட்டுநர் உரிமத்தை நீங்கள் பிரான்ஸ் உரிமமாக மாற்ற வேண்டியதில்லை.

ஆனால், நீங்கள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு (185 நாட்கள்) பிரான்சில் வசிக்கவில்லை என்றால், ஒரு மூன்றாம் நாட்டவராக ஒரு புதிய ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், அதாவது பிரெக்சிட் நிறைவேறிய 12மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்குமுன், பிரான்சில் வசிக்கும் பிரித்தானியர்கள் முடிந்தவரையில் விரைவாக தங்கள் ஓட்டுநர் உரிமத்தை மாற்றிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு பிரித்தானியர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers