பிரான்சில் ஓட்டுனர் உரிமம் இல்லாத சாரதிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் இயக்கும் சாரதிகளின் எண்ணிக்கை 700,00 என அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஓட்டுனர் உரிமம் எடுப்பதற்கான கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

நாடு முழுவதும் இதுபோன்ற நிலை நீடிப்பதாகவும் தெரியவந்துள்ளது. Seine-et-Marne பகுதியில் தினமும் ஓட்டுனர் உரிமம் இன்றி பயணிக்கும் சாரதிகள் கைது செய்யப்படுகின்றார்கள்.

கடந்த பத்து வருடங்களில் இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தாங்கள் வேலை பார்த்து பணம் சேர்த்து ஓட்டுனர் உரிமம் எடுப்பது மிக சிரமமாக உள்ளது என சாரதிகள் பலர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ஆனால் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற பணம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இதுவரை கணக்கிட்டதில் நாட்டில் மொத்தமாக 680,000 சாரதிகள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்கள் செலுத்துகின்றனர்.

ஆனால், ஓட்டுனர் உரிமம் இன்றி கைது செய்யப்படும் நபர்களுக்கு 15,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers