Brexit தாமதத்தால் பிரான்சிலுள்ள பிரித்தானியர்களுக்கு என்னென்ன நன்மைகள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மீண்டும் ஒருமுறை பிரெக்சிட் தாமதித்துள்ள நிலையில், அதினால் பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதை விளக்குகிறது இந்த செய்தி.

வாழிடம் தொடர்பில் என்ன செய்ய இயலும்?

நீண்ட காலமாக பிரான்சில் வாழ்ந்துவரும் பிரித்தானியர்கள், ஏற்கனவே ஒரு நிரந்தர வாழிட உரிமம் வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் பலர் இன்னும் நிரந்தர வாழிட உரிமம் பெறவில்லை.

பிரெக்சிட் குறித்த நிலையற்ற தன்மை காரணமாக, இந்த ஆண்டின் துவக்கத்தில் பிரான்ஸ் துறைகள் பல, பிரித்தானியர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதில்லை என அறிவித்திருந்தன.

என்றாலும் ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனையில்தான் உள்ளன. ஆனால் இந்த சூழ்நிலையில் பிரித்தானியர்கள் என்ன செய்யலாம் என்றால், தாங்கள் சட்டப்படி பிரான்சில் வாழ்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் அல்லது தாங்கள் எப்போது பிரான்சுக்கு வந்தோம் என்பதற்கான ஆதாரங்களை சேகரிக்கலாம், அப்படி செய்தால், மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அவை நிராகரிக்கப்படாது.

நீங்கள் நீண்ட காலமாக பிரான்சில் வசித்து வந்தாலும், அது சட்டப்படி வாழ்வதற்கு சமமாகாது என்பதை நினைவில் கொள்க.

நீங்கள் வாழிட உரிமத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டாலும், மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில் ஆண்டுதோறும் வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்படும் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களைப்போல நீங்களும் வெளியேற்ற கேட்டுக்கொள்ளப்படும் சூழல் ஏற்படலாம்.

பிரெக்சிட்டுக்கு முன் பிரித்தானியர்களுக்கு பிரான்சில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்வதற்கு கட்டாயம் இல்லாமல் இருந்தது.

இப்போது நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கு, நீங்கள் ஐந்தாண்டுகள் சட்டப்படி பிரான்சில் வாழ்ந்ததை நிரூபிக்க வேண்டும்.

அது பலருக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக குறைந்த வருவாய் உடையோர் அல்லது சொந்த தொழில் செய்தும் போதுமான வருவாய் இல்லாதவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன.

சட்டப்படி வாழ்வதற்கான முக்கிய நிபந்தனைகள் பெரும்பாலும் வருவாய் சார்ந்தவை. உங்களுக்கு போதுமான அளவில் வருவாய் உள்ளது என்றும் நீங்கள் பிரான்சுக்கு பாரம் அல்ல என்பதையும் நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

மேலும் உங்கள் வேலை நிரந்தரமானதா, நிரந்தர வருவாய் தரும், முறையான வேலைதானா, தொடர்ந்து வாழ்வில் முன்னேற தகுதியுடைய வேலைதானா என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

பிரான்சில் வாழ நான் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்?

பிரெக்சிட் தொடர்பில் இது குறித்த ஒரு நிலையில்லாத்தன்மைதான் காணப்படுகிறது. அது பிரித்தானியா, ஒப்பந்தங்களுடன் வெளியேறுமா ஒப்பந்தங்களின்றி வெளியேறுமா என்பதைப் பொருத்தது.

என்றாலும் வருவாய் தொடர்பான விதிகள் தற்போது ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு இருப்பது போலவே இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

குறைவான வருவாய் உடையவர்களின் நிலைமை என்ன?

நிச்சயம் ஏதாவது வகையில் நீங்கள் உங்கள் வருவாயை அதிகரித்துக் கொள்வதைக் குறித்து சிந்தித்துதான் ஆக வேண்டும், வேறு வழியில்லை. ஆவணங்களை தயார் செய்யுங்கள்

என்ன நடந்தாலும் நீங்கள் பிரான்சில் வாழ்வதற்கு விண்ணப்பித்துதான் ஆக வேண்டும், அதற்காக ஏராளமான ஆவணங்களை நிரப்ப வேண்டியிருக்கும்.

அந்த ஆவணங்கள் நிரப்பப்படவில்லையென்றால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்தல் நலம்.

அரசு இணையதளத்தில் என்னென்ன ஆவணங்கள் தேவை என்ற பட்டியலைக் காணலாம்.

வேறு என்னவெல்லாம் செய்யலாம்?

முடிந்தால் உங்கள் மருத்துவக்காப்பீட்டை தயார் செய்யலாம்.

ஓட்டுநர் உரிமம் குறித்து என்ன?

நல்ல செய்தி என்னவென்றால், சென்ற வாரம் பிரான்ஸ் அரசு ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேறினாலும், தங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி பிரித்தானியர்கள் பிரான்சில் வாகனம் ஓட்டலாம் என அறிவித்துள்ளது.

அதற்கு பதிலாக நான் ஒரு பிரெஞ்சு குடிமகனாக மாறிவிடலாமே?

நீங்கள் அப்படி உறுதியாக முடிவெடுக்கும் பட்சத்தில், நீங்கள் ஐந்தாண்டுகள் பிரான்சில் வாழ்ந்தபிறகு குடியுரிமைக்குவிண்ணப்பிக்கலாம்.

பிரான்சைப் பொருத்தவரையில், குடியுரிமைக்காக விண்ணப்பிப்பது நீண்ட மற்றும் சற்று சிக்கலான ஒரு செயல்முறையாக இருந்தாலும், குடியுரிமை வழங்குவதில் மற்ற நாடுகள் பலவற்றைப்போல் அல்லாமல் பிரான்ஸ் மிகவும் தாராள மனதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நான் திருமணம் செய்து கொள்ளவேண்டுமா?

வாழிட உரிமத்தைப் பொருத்தவரையில் திருமணம் உங்கள் சட்டப்பூர்வ நிலையை பெரிய அளவில் மாற்றாது என்பதோடு உங்கள் குடியுரிமையை விரைவாக பெற்றுத்தருவதிலும் பெரிய அளவில் உதவாது என்பதால், அதற்கும் திருமணத்திற்கும் அதிக சம்பந்தமில்லை என்பது சோகமான விடயம்தான்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers