பரிதாபத்திற்குரிய நிலையில் வாழும் அகதிகள்: பிரான்சுக்கு ஐக்கிய நாடுகள் குட்டு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் அகதிகளும் புலம்பெயர்வோடும் பரிதாபத்திற்குரிய நிலையில் வாழ்வதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க பிரான்ஸ் அரசை வலியுறுத்தியுள்ளது.

பிரான்சில் சுமார் 16,000 பேர் அதிகாரப்பூர்வமற்ற குடியிருப்புகளில் மிக மோசமான நிலையில் கூடாரங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் Greater Paris பகுதியில் இருப்பதும், அங்கும் தங்கும் இடமின்றி தெருக்களில் உறங்குவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் கலாயிஸ் வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

Porte d'Aubervillers பகுதியில் பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 200 பேர் தெருக்களில் தங்கியுள்ளார்கள்.

பிஸியான பாரீஸின் ரிங் ரோடின் கீழ், சாலையில் ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் பயணிக்கும் நிலையிலும், புலம்பெயர்ந்தோர் பலர் முகாமிட்டிருக்கிறார்கள்.

பிரான்சில் சாலைகளில் மோசமான நிலையில் புலம்பெயர்வோர் தங்குவதைக் குறித்து குறிப்பாக பேசியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தூதரான Leilani Farha, குறிப்பாக 600 முதல் 700 பேர் வட பிரான்ஸ் கடற்கரையில் முகாம்களில், அவசர உதவி முகாம்களை அணுகக்கூட இயலாத நிலையில் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூடாரங்களிலும் அதிகாரப்பூர்வமற்ற குடியிருப்புகளிலும் தங்குவோரை வெளியேற்றும் மனிதாபிமானமற்ற செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் சென்றிருந்த ஒரு கட்டிடத்தில் சுமார் 300 பேர், குழந்தைகள் உட்பட, மிகுந்த நெரிசலில், எங்கும் பூச்சிகள் காணப்பட, நிரம்பி வழியும் கழிவறைகளுடன் வாழ்வதைக் கண்டதாக தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் சபையின் தூதரான Leilani Farha.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers