பாரிசில் பெரும் சத்தத்துடன் இடிந்து நொறுங்கிய கட்டிடம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் கட்டிடத்தின் ஒரு பகுதி பெரும் சத்தத்துடன் வெடித்து நொறுங்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சனிக்கிழமை இரவு, பாரிசின் 18ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய வெடிப்பு சத்தம் ஒன்று கேட்டது. அதனைத் தொடர்ந்து அந்நகர பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது நான்கு மாடி கட்டிடத்தின் முதலாவது தளம் ஒன்றும், இரண்டாவது தளத்தின் ஒரு பகுதியும் வெடித்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இடிபாடுகளுக்குள் தீக்காயங்கள் ஏற்பட்ட நபர் ஒருவர், உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து விவரம் எதுவும் தெரியாத நிலையில், இடி முழக்கம் போன்ற ஒரு சத்தம் கேட்டது என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், எரிவாயு கசிவினால் ஏற்பட்ட விபத்து இல்லை என முதற்கட்டமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers