பிரான்சில் ஒன்றரை வயது குழந்தையை கத்தியால் குத்திக் கொன்ற கொடூர தாய்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் பெண்ணொருவர் தனது 19 மாத குழந்தையை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

La Chapelle-en-Serval நகரில் உள்ள வீட்டில் நபர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. ‘தனது பிள்ளையை அவள் கொன்றுவிட்டாள்’ என்ற அந்த சத்தத்தைக் கேட்ட அவ்வழியாக சென்றவர்கள், உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். அங்கு 30 வயதுடைய பெண்ணொருவர் தொடையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையிலும், அவரது 19 மாத குழந்தையும், 5 வயது குழந்தையும் கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும் கிடந்துள்ளனர்.

இதனைப் பார்த்து பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அதிர்ச்சியில் உறைந்திருந்த அப்பெண்ணின் கணவர் தனது மனைவி குறித்து பொலிசாரிடம் புகார் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,‘தூங்கிக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டு எழுந்தபோது, என் மனைவி தனது வெட்டுக்காயத்தை மறைக்க முற்பட்டார். என் பிள்ளைகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவள் என் பிள்ளைகளை கொல்ல முயற்சித்திருக்கக் கூடும்’ என தெரிவித்தார்.

அதன் பின்னர், அவர்களை பொலிசார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், குறித்த பெண்ணை விசாரணை வளையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து Fitz James மனநல மருத்துவமனைக்கு அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers