இயேசுவின் தலையில் இருந்த விலையுயர்ந்த முள் கீரிடம் மீட்பு: வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்

பாரீஸ் நகரில் உள்ள மிகப் பழமையான புகழ் பெற்ற நாட்ரிடாம் கதீட்ரல் தேவாலயத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன.

கோதிக் கலை கட்டட வடிவமைப்புக்கு பெயர் போனது இந்த நாட்ரிடாம் கதீட்ரல் தேவாலயத்தின் கூரைபகுதி மரத்தால் ஆனது என்பதால் அது தீயில் முழுவதுமாக எரிந்துவிட்டது.

தற்போது, தேவாலயத்தில் சீரமைப்பு பணிகள் நடந்துகொண்டிருப்பதால் அதன் மூலம் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதில் சதி வேலை ஏதும் இல்லை என நம்புவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, சேதமடைந்த தேவாலயத்தை மீண்டும் முழுவதுமாக சீரமைப்போம் என கூறியுள்ளார்.

தேவாலயத்திற்குள் உள்ள சில முக்கிய கலைவண்ணப்பொருட்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் முக்கியமானதாக யேசுவின் தலையில் இருக்கும் விலையுயர்ந்த முள் கிரீடம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிரீடம் மட்டுமின்றி அரங்கில் உள்ள பல விலையுயர்ந்த கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ள என பாரிஸ் மேயர் Anne Hidalgo, தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்