தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம்: மேக்ரான் நெகிழ்ச்சி உரை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் புகழ் பெற்ற நாட்ரி டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ, பாரம்பரியம் மிக்க கத்தோலிக்க தேவாலயத்தை மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்கர்களின் உள்ளங்களையும் பாதித்துள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆறு மில்லியன் பவுண்டுகள் செலவில் தேவாலயத்தின் கூரைப்பகுதியில் நடந்து கொண்டிருந்த பழுது பார்க்கும் வேலைகளின்போது ஏற்பட்ட சிறு விபத்து, உலகப் பிரசித்தி பெற்ற தேவாலயத்தையே உருமாற்றி இருக்கிறது.

உலகெங்கும் உள்ள சுற்றுலாப்பயணிகள் வருகை புரியும் தேவாலயமான நாட்ரி டாம் தேவாலயம், கிறிஸ்தவர்களின் புனித வாரமான இந்த நேரத்தில் தீப்பற்றி எரிந்த நிகழ்வு உள்ளூர் மக்களையும், சுற்றுலாப்பயணிகளையும் கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது.

இதற்கிடையில், தீ விபத்து நடந்து சில மணி நேரங்களுக்குள்ளாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், சற்றும் தாமதியாமல் மீண்டும் தேவாலயத்தை கட்டி எழுப்புவோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தேசிய அளவில் நிதி திரட்டும் பிரச்சாரம் ஒன்றை துவக்கி சர்வதேச உதவியுடன், உலகின் தலைசிறந்த வல்லுநர்கள் உதவியுடன் மீண்டும் தேவாலயத்தைக் கட்டி எழுப்புவோம் என்று மேக்ரான் சூழுரைத்தார்.

தேவாலயத்தின் முக்கிய பகுதிகளை அழியாமல் காத்த தீயணைப்பு வீரர்களின் தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய மேக்ரான், மோசமான நிகழ்வு தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கிடையில் நேற்று மாலையே பிரான்ஸ் கோடீஸ்வரரான Francois-Henri Pinault, தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக 100 மில்லியன் யூரோக்கள் அளிப்பதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்