வரலாற்று சிறப்பு வாய்ந்த தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து! பிரான்சுக்கு உலகம் முழுவதும் பெருகும் ஆதரவு

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் Notre-Dame தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து சோக அலையை ஏற்படுத்திய நிலையில், உலகம் முழுவதும் இருந்து அந்நாட்டிற்கு ஆதரவு பெருகியுள்ளது.

பாரிஸ் நகரில் உள்ள மிகவும்பழமை வாய்ந்த Notre-Dame தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவத்தால் நகரின் பல பகுதிகளிலும் புகை மண்டலம் ஏற்பட்டது.

இதனை நேரில் பார்த்த அந்நகர மக்களும், சுற்றுலாப் பயணிகளும் பெரும் துயரத்தில் கண்கலங்கியபடியே அந்த இடத்தில் அமர்ந்திருந்தனர். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிற்கு உலகின் பல நகரங்களில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது ஆதரவை பிரான்சுக்கு தெரிவித்ததுடன், உலகில் உள்ள மிக முக்கியமான பொக்கிஷங்களில் ஒன்று, எந்த நாட்டில் இருந்தாலும் அது உலக மக்களுக்கானது என்றும், இது மிகவும் பயங்கரமான தீ விபத்து என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறுகையில், ‘இயற்கை அழித்துக்கொள்வதும், மனிதம் மீண்டும் தலையீட்டுவதும் இயல்பு. நாம் மீண்டும் நாளைக்காக கட்டி எழுப்புவோம்’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தேவாலயம் ஒன்றில் பிராத்தனையில் ஈடுபட்டு தனது கவலையையும், பிரெஞ்சு மக்களுக்கான ஆதரவினையும் தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி, எகிப்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்தும் லண்டன், இஸ்தான்புல் போன்ற நகரங்களில் இருந்தும் பிரான்சுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers