பாரீஸ் தேவாலயம் தீப்பிடித்ததற்காக உலகமே கண்ணீர் வடிக்கும் நேரத்தில் அதை கொண்டாடும் தீவிரவாத அமைப்பு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் நாட்ரி டாம் தேவாலயம் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு உலகமே கண்ணீர் விடும் நேரத்தில் தீவிரவாத அமைப்பு ஒன்று அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது.

ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்களான Al-Muntasir என்னும் அமைப்பு, கொஞ்சமும் ஈவிரக்கமின்றி, நாட்ரி டாம் தேவாலயம் எரிந்தது கடவுள் கொடுத்த தண்டனை, மற்றவர்களை தண்டித்ததற்கான பழிவாங்கப்படுதல் என விமர்சித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள போஸ்டர் ஒன்றில் பற்றியெரியும் தேவாலயத்தின் படத்துடன், இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

மேலும், அந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 1163ஆம் ஆண்டு தொடங்கி 1345ஆம் ஆண்டு முடிந்தன.

தற்போது பல கடவுள்களை வணங்குவதற்கு விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது என்று அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பிரான்சில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தபோதெல்லாம் Al-Munatsir அமைப்பு அவற்றை கொண்டாடி பிரச்சாரங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்.

ஜிகாதிகள் தேவாலயம் எரிந்ததைக் கொண்டாடி வரும் நிலையில், தொடர்ந்து பிரான்சும் மற்ற உலக நாடுகளும் மேற்கத்திய நாகரீகத்தின் பெருமைக்குரிய அடையாளமாக விளங்கிய நாட்ரி டாம் தேவாலயம் எரிந்ததற்காக கண்ணீர் வடித்து வருகின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers