பிரான்சில் பயங்கர தீ விபத்தில் சிக்கிய தேவாலயத்தின் உள்பகுதி இப்போது எப்படி இருக்கிறது? முதல் முறையாக வெளியான சில புகைப்படங்கள்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ள புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயமான நோட்ரே டேம் கதீட்ரலில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்தின் காரணமாக தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமித்து மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதனால் இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டதால், சுமார் 400-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.

இதில் இரண்டு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு தீயணைப்பு வீரர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பாரம்பரிய சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில் தீடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால், பிரான்ஸ் மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

மேற்பகுதி முற்றிலும் சிதைந்துள்ளதால், அதை பழையது போன்றே இனி கொண்டு வர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தால் தேவாலயத்தில் இருக்கும் ஓவியங்கள் அழிந்திருக்குமோ என்ற அச்சமும் நிலவியது. ஆனால் தீயணைப்பு துறைக்கு சொந்தமான டுவிட்டர் பக்கத்தில் அப்படி எதுவும் அழிந்துவிடவில்லை, அனைத்தும் பாதுகாப்பாவே இருக்கிறது.

அதற்கு நாங்கள் தீயை அணைத்துவிட்டோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தீவிபத்தில் சேதமடைந்த தேவலாயத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers