பாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட காரணம் என்ன? ஒப்பந்தக்காரர் மீது குவியும் கண்டனங்கள்!

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

பாரிஸ் தேவாலயம் பயங்கரமான தீ விபத்தில் சிதைந்ததை அடுத்து, மறுசீரமைப்பு பணிக்காக ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தின் தலைவருக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

பாரிஸ் நகரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கிய 850 வருட பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் நேற்று பெரும் தீ விபத்தில் சிக்கி சிதைந்து போனது.

இந்த சம்பவம் குறித்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தற்போது தேவாலயத்தில் மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்ட நிறுவனத்தின் மீது பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

தேவாலயத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள், ஜூலியன் லே ப்ராஸ் (32) என்பவரின் சிறிய நிறுவனதிற்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டிருந்தது. அதற்கான வேலைகளும் £ 5 மில்லியன் செலவில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தேவாலயம் சிதைத்ததை அடுத்து, பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கூரையின் அடிப்பகுதியில் தான் முதலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என புலன்விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர். அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மின்சார கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.

தீப்பிழம்பானது சுமார் 6.50 மணிக்கு தான் வெளியில் இருந்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தொழிலாளர்களின் கூற்றுப்படி 5 முதல் 5.30 மணிக்குள் தங்களுடைய வேலையை நிறுத்தியிருக்கின்றனர்.

விசாரணை படி, தேவாலயத்தில் திருப்பலி நடந்துகொண்டிருக்கும் போது 6.20 மணிக்கு முதல் அலாரம் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த சமயம் எந்த ஒரு தீ பிழம்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் மீண்டும் 6.43 மணிக்கு மீண்டும் அலாரம் எழுப்பப்பட்ட போது தான், கட்டுப்பாட்டை மீறிய அளவிற்கு தீயின் வேகம் இருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணை தற்போது தான் ஆரம்பமாகியுள்ளது என பாரிஸ் நகரத்தின் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தேவாலயத்தில் புதுப்பிக்கும் ஒப்பந்தத்தை பெற்ற பின்னர், நிறுவனத்தின் உரிமையாளர் ஜூலியன் லே ப்ராஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், 150 ஆண்டுகளில் யாருமே தொடாத இந்த தேவாலயத்தை மறுசீரமைப்பு செய்வது எங்களுக்கு கிடைத்த மரியாதை.

இதற்கு போட்டியிட்ட பல முன்னணி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி எங்களுடைய சிறிய நிறுவனம் இதனை கைப்பற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விபத்திற்கு பின்னர் பேசிய அவர், இந்த நாடகத்திற்கு பின்னால் இருப்பவரை வெகு விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதை நாங்கள் அதிகம் விரும்புகிறோம்.

திங்கட்கிழமையன்று 12 பணியாளர்கள் சீரமைப்பு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அனைத்து பாதுகாப்பு வேலைகளையும் மதிப்பளித்து, தொழிலாளர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் விசாரணையில் பங்குபெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers