பாரிஸ் தேவாலயத்தில் நடந்த ஒரு அதிசயம்: ஆச்சரியத்தில் பாரிஸ் மக்கள்!

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்

பிரான்சின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள நோட்ரே டேம் டி தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் தேவாலயத்தின் முக்கிய பகுதியான கண்ணாடி ஜன்னல்களை கவனமாக மீட்டுள்ளனர்.

மூன்று ரோஜாக்கள் கொண்ட இந்த ஜன்னல் தேவாலயத்தில் முக்கிய கட்டமைப்பு பகுதியாக கருதப்படுகிறது. தேவாலயத்தின் மேற்கூரை எரிந்தபோதிலும் அதற்கு கீழே இருந்த இந்த ஜன்னல் சிறிய சேதாரங்களோடு மீட்கப்பட்டுள்ளது.

இவற்றையும் தாண்டி, பீடத்தின் அருகில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக ஜன்னல்கள் வெடித்து சிதறினாலும், அதிலிருந்த சிலுவை எவ்வித சேதமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

பிரான்சின் துணை உள்துறை அமைச்சர் Laurent Nuñez கூறியதாவது, ஒட்டுமொத்த கட்டமைப்பும் தற்போது நல்ல நிலையில் இருந்தாலும் சில பாதிப்புகள் அடையாளமாக அமைந்துள்ளன.

சேதத்தை மதிப்பிடுவதற்கு வல்லுநர்கள் இதுவரை அனுமதிக்கப்படவில்லை மற்றும் பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் அழிவின் அளவை ஆராய ஒரு ட்ரோனை அனுப்பியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers