பிரான்ஸ் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு இது தான் காரணமா? வெளியான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மின்சார கசிவு காரணமாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 850 ஆண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற நாட்ரி டாம் தேவாலயம் தீ விபத்தில் சிக்கியதால், சில பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

ஒரு உலகப்புகழ் பெற்ற சின்னமாக இருந்த தேவலாயத்தில் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டதால், உலகில் பலரும் தங்கள் வருத்ததை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தேவாலயம் மீண்டும் பழையா நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக நிதிகளும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்த விபத்து காரணமாக தேவாலயம் முற்றிலும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த பகுதி வழியே யாரும் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் கிரேன்கள் கொண்டு, சேதமடைந்து பகுதிகள் சுத்தப்படுத்தப் பட்டு வருவதாகவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை நீண்டு கொண்டே செல்கிறது, அதைப் பற்றி இப்போதைய நிலையில் எதுவும் கூற முடியாது என கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று தேவாலயம் மறு சீரமைப்புக்கான பணி நடந்து கொண்டிருந்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மின்கசிவின் காரணமாக கூட இந்த மிகப் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers