பிரான்ஸ் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. தீயணைப்பு வீரர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸில் தேவாலய தீவிபத்தின்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு சேதங்களைக் குறைத்த தீயணைப்பு வீரர்கள் வியாழக்கிழமை கெளரவிக்கப்பட்டனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பழமைவாய்ந்த நாட்டார்டாம் தேவாலயம் பயங்கரமான தீ விபத்தில் சிக்கியது. இருப்பினும் தேவாலயத்தில் இருந்த முக்கிய கலைப் பொருட்களை சேதமடையவிடாமல், தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

உயிரை பணையம் வைத்து சிறப்பாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்களை கெளரவிக்கும் விழா, பாரிஸ் நகர சிட்டி ஹாலில் நடைபெற்றது. மேலும், தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி கூறும் பிரம்மாண்டமான பதாகைகள் தொங்கவிடப்பட்டன.

பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில்,இமானுவல் மேக்ரான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த நாட்டு ராணுவத்தின் அங்கமாகத் திகழும் தீயணைப்புப் படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகளும், வீரர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers