பிரான்சில் முதல் முறையாக குழந்தைகளுக்காக...என்ன தெரியுமா? வெளியான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் முதன் முறையாக சிறைச்சாலையில் குழந்தைகளுக்கான பாடசாலை ஒன்று திறக்கப்பட உள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Fleury-Mérogis சிறைச்சாலையில் இருக்கும் பெண் கைதிகளின் குழந்தைகளுக்காக இந்த மழலையர் பாடசாலை திறக்கப்பட உள்ளது.

பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பாடசாலை அமைக்கப்பட உள்ளது.

பாடசாலை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:30 மணியில் இருந்து மாலை 5 மணிவரை திறந்திருக்கும் எனவும், இதற்கு கட்டணமாக குழந்தை ஒன்றுக்கு மாதம் €10 யூரோக்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர சபை இந்த ஏற்பாட்டினை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers