இலங்கையில் பலரையும் பலிகொண்ட குண்டு வெடிப்பு சம்பவம்..பிரான்சில் ஈபிள் டவர் அணைக்கப்படும் என்று அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பாரிசில் இருக்கும் ஈபிள் டவரின் விளக்குகள் சில நிமிடம் அமர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இலங்கையில் எட்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் வெளிநாட்டினரை சேர்ந்த சிலர் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை மக்களை துயரத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு உலகநாடுகள் தங்கள் ஆழ்ந்த இரங்கலையும், முடிந்த உதவிகளையும் செய்து வருவதாக தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற பாரிஸ் டவர், இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, நள்ளிரவு 12.00 மணிக்கு விளக்குகள் சில நிமிடங்கள் அனைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்