நாட்ரி டாம் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடும் பிரான்ஸ் நாட்டவர்கள் இம்முறை என்ன செய்தார்கள் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

வழக்கமாக ஈஸ்டர் பண்டிகையை நாட்ரி டாம் தேவாலயத்தில் கொண்டாடும் பிரான்ஸ் நாட்டவர்கள், இம்முறை அதற்கு சற்று தொலைவில் உள்ள மற்றொரு தேவாலயத்தில் கூடினார்கள்.

ஈஸ்டர் பண்டிகையை நாட்ரி டாம் தேவாலயத்தில் கொண்டாடும் பிரான்ஸ் நாட்டவர்கள், அது தீயில் சேதமடைந்ததால், அதற்கு சற்று தொலைவில் உள்ள Saint-Eustache தேவாலயத்தில் கூடி பண்டிகை கொண்டாடினர்.

அத்துடன் எரிந்துபோன தங்கள் தேவாலயம் விரைவில் மீண்டும் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

நாட்ரி டாம் தேவாலயத்தின் கோபுரமும் கூரையின் மூன்றில் இரண்டு பாகமும் தீயில் எரிந்து நாசமாகின.

எனவே அந்த தேவாலயம் புதுப்பிக்கப்படும் வரையில் மூடப்பட்டுள்ளது, எத்தனை ஆண்டுகளுக்கு என்று தெரியாது.

எனவே நாட்ரி டாம் தேவாலயத்தில் தங்கள் விசேஷித்த பண்டிகையான ஈஸ்டர் எனப்படும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகையைக் கொண்டாட முடியாத கத்தோலிக்கர்கள், அதற்கு சற்று தொலைவில் உள்ள Saint-Eustache தேவாலயத்தில் கூடி கொண்டாடினார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்