நாட்ரி டாம் தேவாலய தீ, விபத்தல்ல, அது ஐரோப்பாவின் 9/11...

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நாட்ரி டாம் தேவாலயத்தில் மர்மமான முறையில் தீப்பற்றி அதன் கூரை மற்றும் கோபுரம் ஆகிய பகுதிகள் முற்றிலும் எரிந்து நாசமான நிலையிலும், இதுவரை அது ஒரு விபத்து என்றே கூறிவரும் அதிகாரிகள் எந்த குற்றவியல் விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

இது எதையோ மூடி மறைக்கும் செயல் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ’Stand Up, France’ என்னும் அமைப்பின் தலைவராகிய Nicolas Dupont-Aignan, விபத்து குறித்து கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ விளக்கங்கள் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்கிறார்.

தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற அவர், தேவாலய தீக்கு காரணம் விபத்தா அல்லது ஏதேனும் தாக்குதலின் விளைவா என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

தேவாலயத்தின் மறுபக்கம் இருந்து பார்க்கும்போது, தேவாலயம் தீப்பற்றி எரிந்ததைப் பார்ப்பதற்கு போர்க்களம்போல் காணப்பட்டதாக தெரிவித்தார் அவர். பாரீஸ் விசாரணை அலுவலகம், தொடக்கத்திலிருந்தே தாக்குதல் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், குற்றவியல் விசாரணை எதுவும் நடத்தப்படாது என்றும் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் Dupont-Aignan, தொடர்ந்து, குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று கோரி வருகிறார்.

அவரைப்போலவே பிரபல பத்திரிகையாளரான Philippe Karsentyயும் மக்கள், தேவாலயம் தீப்பற்றியதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறிய விரும்புவதாகவும் அரசியல் பின்னணி கொண்ட கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் சமூக ஊடகங்கள், இது ஐரோப்பாவின் 9/11 என்றும், ஊடகங்கள் தேவாலய தீ குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்