பிரான்சில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சனை... தலைநகர் பாரிசுக்கு சிவப்பு எச்சரிக்கை

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் டைகர் என அழைக்கப்படும் ஆபத்தான நுளம்பு பரவி வருவதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தலைநகர் பரிஸ் உட்பட நாட்டின் 66 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸ் உடல்நலம் பொது இயக்குநரகம் இது தொடர்பான நோய் பரவுதலுக்கு எதிரான நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 66 மாவட்டங்களில் 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மீதமான மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. Seine-et-Marne, Essonne மற்றும் Seine-Saint-Denis ஆகிய மாவட்டங்களும் சிவப்பு எச்சரிக்கையும் Val-d'Oise மற்றும் Yvelines ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்