பிரான்சில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு: 4 பேர் கைது!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தீவிரவாத தாக்குதல் நடத்தும் நோக்கில் ஆயுதங்களை திரட்ட முயன்றதாக சந்தேகத்தின்பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாத தாக்குதல் திட்டம் ஒன்றை முறியடித்து, சந்தேகத்துக்கிடமான நால்வரை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரும் பொலிஸ் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்களை திரட்டுவதாக சந்தேகம் ஏற்பட்டதால் நான்கு பேரைக் கைது செய்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெரிய தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளதற்கு எங்களுக்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று உள்துறை அமைச்சரான Christophe Castaner, இன்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்