தலா 5,000 யூரோக்கள் செலவு செய்து புகலிடம் கோரி சென்ற 60 இலங்கையர்கள் நாடு கடத்தல்: வெளியான பின்னணி

Report Print Raju Raju in பிரான்ஸ்

ரீயூனியன் என்ற பிரஞ்ச் தீவுக்கு புகலிடம் கோரி சட்டவிரோதமாக வந்ததாக கூறி 60 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டார்கள்.

இலங்கையில் இருந்து 120 பேர் கடல்வழியாக 4000 கிலோ மீட்டர் கடந்து இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள ரீயூனியன் எனப்படும் பிரஞ்ச் தீவுக்கு கடந்த 13ஆம் திகதி வந்துள்ளனர்.

இதில் மூன்று பெண்கள், மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 60 பேரை பிரான்ஸ் திங்கட்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தியது.

அதன்படி சிறப்பு விமானம் மூலம் 60 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

ரீயூனியன் தீவுக்கு வருவதற்காக இலங்கையர்கள் ஒருவருக்கு 2,000-5,000 யூரோஸ் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

படகில் இலங்கையர்களை அழைத்து வந்ததாக கூறி இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவியாக மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மே 15ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்