மே தினம்: பிரித்தானியாவில் ஆடையின்றி கொண்டாட்டம், பிரான்சில் மேலாடையின்றி போராட்டம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரித்தானியாவில் இளைஞர்கள் மே தினத்தை ஆடையின்றி உல்லாசமாக கடலில் குளித்து கும்மாளமிட்டு கொண்டாடிய அதே நேரத்தில், பிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் தங்கள் கொள்கைகளுக்காக அரை நிர்வாணமாக பேரணி சென்றனர்.

மே தினம் உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்ட நிலையில், பிரித்தானிய இளைஞர்களும் இளம்பெண்களும் ஆடையின்றி உல்லாசமாக கடலில் குளித்து மே தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

அதே நேரத்தில் வரி உயர்வு உட்பட தங்கள் கொள்கைகளுக்காக போராடி வரும் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களில் சில இளம்பெண்கள் மேலாடையின்றி, தங்கள் மார்பகங்களை டேப் கொண்டு ஒட்டி மறைத்துக் கொண்டு பேரணிகளில் ஈடுபட்டனர்.

சில இளம்பெண்கள் தலையை மறைக்கும் வகையில் சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தாலும் மார்பகங்கள் தெரியும் வகையில் உடையணிந்தும், காயம்பட்டதுபோல் மேக் அப் போட்டபடியும் பேரணிகளில் ஈடுபட்டனர்.

கலவரத் தடுப்பு பொலிசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசி பேரணியில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை கலைத்தனர்.

சில போராட்டக்காரர்கள் பதிலுக்கு கையில் கிடைத்தவற்றையெல்லாம் எடுத்து பொலிசார் மீது வீசி எறிந்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்