ஐரோப்பிய ஒன்றிய கொடியை தூக்கி வீசிய நாடாளுமன்ற உறுப்பினர்: வைரலான ஒரு வீடியோ!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அரசு கட்டிடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய கொடியை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக பிரான்ஸ் கொடியை வைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான Florian Philippot, அந்த ஐரோப்பிய ஒன்றிய கொடியை அகற்றியதோடு அதை தூக்கி வீசவும் செய்வதைக் காணலாம்.

‘The Patriots’ என்னும் கட்சியின் தலைவரான Florian Philippot ஐரோப்பிய ஒன்றிய கொடியை தூக்கி வீசிவிட்டு அதை கொண்டாடும் விதமாக கைதட்டுகிறார்.

இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது ஐரோப்பா முழுவதும் காணப்படும் அதிருப்தியை காட்டுவதாக கருதப்படுகிறது.

Florian Philippotஇன் ட்விட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோ சுமார் 3,000 முறை பகிரப்பட்டது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்