பிரான்சில் ஆபாசமாக உடையணிந்திருந்த பெண்ணை பேருந்தில் ஏற்ற மறுத்த டிரைவர்!

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பெண் ஒருவர் ஆபாசமாக உடையணிந்திருந்ததால், அவரை பேருந்து டிரைவர் ஏற்ற மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் 19-ஆம் வட்டாரத்தில் இருக்கும் Botzaris பேருந்து நிறுத்ததில், அல்ஜீரியாவைச் சேர்ந்த Kamel Bencheikh என்ற எழுத்தாளரும், அவரது மகளும் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பேருந்து வந்த நின்று போது, பேருந்தின் டிரைவர் Kamel Bencheikh இன் மகள் அணிந்திருந்த ஆடை சிறியதாகவும், ஆபாசமாக இருப்பதாக அவர்களை ஏற்றாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து இது குறித்து அவர்கள் சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டதால், வைரலானது. இந்த தகவல் உடனடியாக RATP அதிகாரிகளுக்கும் தெரியவந்துள்ளது.

இதனால் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரிகள், டிரைவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், தொடர் விசாரணைக்கு பின்னரே முழு தகவல் தெரிவிக்க முடியும் என்று கூறியுள்ளதாக், அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers