பாரிசில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தீயணைப்புபடை வீரர்கள் கைது!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் பாலியல் குற்றச்சாட்டின் கீழ், நேற்றைய தினம் தீயணைப்புப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாரிசின் 14ஆம் வட்டாரத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில், மூன்று வெளிநாட்டு பெண்கள் விடுப்பில் இருந்த தீயணைப்புப் படையினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

பாதிக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர் ஜேர்மனியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குற்றம்சாட்டப்பட்ட தீயணைப்பு படையினர் அப்போது பணியில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த தீயணைப்பு படையினர் கைது செய்யப்பட்டனர். இந்த தகவலை பாரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாரிஸ் தீயணைப்பு படையினரின் பேச்சாளர் Lieutenant-Colonel Gabriel கூறுகையில், ‘மூன்று அதிகாரிகள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்