பாரிஸ் காவல்நிலையம் இரண்டு நாட்கள் சேவை நிறுத்தம்: சுவாரஸ்ய காரணம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பாரிசில் உள்ள காவல்நிலையத்தில் கரப்பான் பூச்சிகள் தொல்லை அதிகரித்துள்ளமையால் இரண்டு நாட்களுக்கு சேவையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள காவல்நிலையமே கரப்பான் பூச்சி கடிக்கு ஆளாகியுள்ளது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை காவல்நிலையம் பொதுமக்களுக்காக மூடப்பட்டது. சில அவசரப்பணிகளுக்காக மட்டும் குறிப்பிட்ட சேவைகள் அருகாமையில் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து முன்னெடுத்து வரப்படுகிறது.

அடுத்த 48 மணிநேரங்களுக்கு இந்த நிலையம் மூடப்பட்டிருக்கும் என அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. பூச்சிகள் தொல்லை ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என காவல்துறை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

சில அதிகாரிகள் பூச்சிக்கடியால் மருத்துவர்களை நாடியுள்ளதாகவும், இதுவே பாதுகாப்பு அதிகாரிகளின் சுகாதர நிலமைகள்' எனவும் காவல்துறை தொழிற்சங்க துணை தேசிய செயலாளர் Emmanuel Cravello தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சர் Christophe Castaner விரைவில் அதிகாரகளுடன் சந்திப்பு நிகழ்த்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்