5 மாதத்தில் 32 பொலிஸ் அதிகாரிகள் தற்கொலை..பிரான்சில் துயரம்

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்

பிரான்சில் ஜெண்டர்மேர் எனப்படும் தேசிய ஆயுதப்படையை சேர்ந்த வீரர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் அன்யாய்-சர்-ஒர்டன் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய வீரரே அவரது வீட்டில் தனது ஆயுதம் மூலம் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குடும்பம் போல் பணியாற்றி வந்த நிலையில் இந்த துயரத்தால் அனைவரும் வருத்தப்படுவதாக ஆயுதப்படை குழுவின் தலைமை அதிகாரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த துயரம் சம்பவம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டு ஆரம்பம் முதல் தற்போது வரை 4 தேசிய ஆயுதப்படை வீரர்களும், 28 பொலிஸ் அதிகாரிகளும் என 32 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் படி 2018 ஆம் ஆண்டு சுமார் 35 பொலிசாரும், 33 தேசிய ஆயுதப்படையை சேர்ந்த வீரர்களும் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்