பாரிஸில் நார்வே மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்.. தீயணைப்பு வீரர்கள் சிக்கினர்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சிற்கு சுற்றுலா வந்த நார்வே மாணவி தன்னை தீயணைப்பு வீரர்கள் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

தலைநகர் பாரிஸிலே இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 20 வயதுடைய நார்வே மாணவி சனிக்கிழமை அன்று இரவு பாரிஸில் உள்ள பாருக்கு இரண்டு ஆண் நண்பர்களுடன் வந்துள்ளார். பாரில் தீயணைப்பு வீரர்கள் குழுவை சந்தித்த மாணவி அக்குழுவில் இருந்த ஒருவருடன் அருகிலிருந்த அவரது அறைக்கு சென்றுள்ளார்.

தீடீரென அறைக்குள் நுழைந்த மற்ற தீயணைப்பு வீரர்கள் தன்னை கூட்டாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் 25 வயது முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி 8 தீயணைப்பு வீரர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் பலரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்