நான்கு பெண்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்ட இளைஞர்: ஐந்து மணி நேர முற்றுகைக்கு பின் நடந்தது என்ன?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தெற்கு பிரான்சில் இளைஞர் ஒருவர் மளிகைக் கடை ஒன்றில் நான்கு பெண்களை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார்.

அந்த கடையை சுற்றி வளைத்த பொலிசார், அந்த பகுதியில் இருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.

மூன்று முறை அவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், தலையில் கெமரா பொருத்திய தலைக்கவசம் அணிந்து, பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஒருவரை அனுப்புமாறு கோரியதாகவும் பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. பின்னர் ஒரு பிணைக்கைதியை அவர் விடுவித்தார்.

வானில் பொலிஸ் ஹெலிகொப்டர் ஒன்று வட்டமிட்டபடியே இருந்தது. ஐந்து மணி நேரத்திற்குப்பின் அவர் மற்ற பிணைக்கைதிகளையும் விடுவித்தார்.

பின்னர் பொலிசாரிடம் சரணடைந்த அவரை கைது செய்து பொலிசார் காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட நபர் 17 வயது இளைஞர் என்பதும், மஞ்சள் மேலாடை போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பதும், அதனால் பொலிசாருக்கு அறிமுகமானவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அவரது கோரிக்கைகள் தெரியாத நிலையில், அவர் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரா என்பது குறித்து இவ்வளவு சீக்கிரத்தில் கூற இயலாது என்று பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்