பிரித்தானியாவைப்போலவே பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் மக்களிடையே ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான விருப்பமின்மையின் அளவு ஆச்சரியப்படத்தக்க அளவில் அதிகரித்து வரும் நிலையில், பிரெக்சிட்டைப்போலவே ஃப்ரெக்சிட்டும் நடக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை மகிழ்ச்சியுடன் வரவேற்ற பிரெஞ்சு மக்கள் தற்போது தாங்களும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்சில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து ஒரு வாக்கெடுப்பு நடத்தியிருந்தால், பிரித்தானியர்கள் எடுத்த அதே முடிவைத்தான் பிரெஞ்சு மக்களும் எடுத்திருப்பார்கள் என்று முன்பொருமுறை கூறியிருந்ததற்கு பதிலளிக்கும் வகையில் பிரித்தானிய வாழ் பிரெஞ்சு அரசியல் நிபுணரான Dr Downing இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரெக்சிட் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தான் Marseilleஇல் இருந்ததாக தெரிவித்த Downing, தான் ஒரு குறிப்பிட்ட அளவு வெறுப்பைத்தான் எதிர்பார்த்ததாக தெரிவிக்கிறார்.

ஆனால் அதற்கு பதிலாக தன்னை சந்தித்த ஏராளமானோர் இது மிகவும் பெரிய விடயம் என விமர்சித்தது தன்னை ஆச்சரியப்படுத்தியதாக தெரிவிக்கிறார்.

இதில் ஒரு விடயம் ஆர்வமூட்டுவதாக உள்ளது, அது என்னவென்றால், தங்கள் நோக்கம் குறித்த செய்திகளை தெரியப்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதுதான் என்கிறார் அவர்.

ஐரோப்பிய சமுதாய நிதி என்பது போன்ற விடயங்கள் குறித்து கூட மக்களுக்கு தெரியவில்லை என்கிறார் Downing.

இமானுவல் மேக்ரான் கூறியது போலவே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து ஒரு வாக்கெடுப்பு நடத்தியிருந்தால், நிச்சயம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக பெரிய அளவில் பிரான்ஸ் மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்கிறார் Downing.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்