இல்-து-பிரான்சில் 24 மணிநேரத்தில் கொட்டித்தீர்த்த ஒரு மாதத்திற்கான மழை!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் இல்-து-பிரான்ஸ் நகரில், ஒரு மாதத்திற்கான மழை கடந்த 24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்றைய தினம் மழை கொட்டித் தீர்த்துள்ளது. குறிப்பாக Orly (Val-de-Marne) பகுதியில் 62 மில்லி மீற்றர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் சிக்கின. இதுபோன்று எந்தவொரு மே மாத நாளிலும் மழை பெய்ததில்லை என்று கூறப்படுகிறது.

தலைநகர் பாரிசில் 48 மில்லி மீற்றர் அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதுவும் மே மாதம் பெய்த அதிகபட்ச மழைப்பொழிவாகும்.

இவை தவிர Bures-sur-Yvette, Essonne நகரில் அதிகபட்சமாக 75 மில்லி மீற்றர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

மே மாதத்தின் மொத்த நாட்களிலும் பெய்யும் மழைப்பொழிவை, கடந்த 24 மணிநேரத்திலேயே இல்-து-பிரான்ஸ் சந்தித்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்