ஸ்ட்ராஸ்பர்க் தாக்குதல்: ஆயுதம் வழங்கிய சந்தேக நபர்கள் ஐவர் கைது

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸில் ஸ்ட்ராஸ்பர்க் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஐந்து முக்கிய நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி ஸ்ட்ராஸ்பர்க் நகரின் கிருஸ்துமஸ் சந்தைக்கடையில் இடம்பெற்ற தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதோடு, பதினொரு பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலோடு தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் செவ்வாய்க்கிழமை ஸ்ட்ராஸ்பர்க் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 முதல் 46 வயதுடைய இரண்டு பெண்களையும், மூன்று ஆண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் ஸ்ட்ராஸ்பர்க் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆயுதம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதே குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்