ஏழு நோயாளிகளுக்கு விஷம் கொடுத்த மருத்துவர்: 50 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஏழு நோயாளிகளுக்கு விஷம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரான்ஸ் மருத்துவர் ஒருவர், மேலும் 50 நோயாளிகளுக்கு விஷம் கொடுத்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து நேற்று மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பிரான்சிலுள்ள இரண்டு மருத்துவமனைகளில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றி வந்தவர் Frederic Pechier.

2008க்கும் 2017க்கும் இடையில் அவர் பணிபுரிந்த அந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 முதல் 53 வயதுக்குட்பட்ட ஏழு நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

அவர்களில் இருவர் உயிரிழக்க, மற்றவர்களை மருத்துவர்கள் முதலுதவி செய்து காப்பாற்றினர்.

பின்னர் மருத்துவ பரிசோதனையில், நோயாளிகளின் இரத்தத்தில் சர்ச்சைக்குரிய நச்சுப்பொருள் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2917இல் Pechier மீது குற்றம் சாட்டப்பட, அவர் மறுக்க, விசாரணை ஒரு பக்கம் நடக்க மறுபக்கம் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையில் இரண்டாண்டுகளாக நடந்த விசாரணையில், அறுவை சிகிச்சைக்காக வந்தது தவிர்த்து மற்றபடி ஆரோக்கியமாக இருந்த சுமார் 50 பேர் வரை உயிரிழந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ஏழு நோயாளிகளும் Pechierஇன் நோயாளிகள் அல்ல என்றபோதிலும், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டபோது, விரைந்து அவர்களை காப்பாற்ற அவர் உதவியதையடுத்து அவரை அவரது சகாக்கள் அறிவுமிக்க மயக்க மருந்து நிபுணர் என புகழ்ந்தனர்.

ஆனால் மயக்க மருந்து கொடுப்பதற்காக அவரது நண்பர்கள் வைத்திருந்த மயக்க மருந்துகளில் நஞ்சு கலந்துவிட்டு, தனது உதவி தேவைப்படும் விதத்தில் அசம்பாவிதமான ஒரு சூழலை உருவாக்கினார் Pechier என பொலிசார் குற்றம் சாட்டுகின்றனர்.

Pechierஇன் வழக்கறிஞர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்