17 வருட ஓட்டம் முடிவுக்கு வந்தது... ஸ்பெயின் அரசியல் தலைவர் பிரான்சில் அதிரடி கைது

Report Print Basu in பிரான்ஸ்
150Shares

17 வருடங்களாக தலைமறைவாக இருந்து ஸ்பெயினின் முன்னாள் அரசியல் தலைவர் பிரான்சில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஸ்பெயின், பாஸ்க் பிரிவினைவாத அமைப்பின் முன்னாள் தலைவர் Josu Ternera பிரான்சின், ஆல்ப்ஸ் Sallanches பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1987ஆம் ஆண்டு வடக்கு ஸ்பெயினில் உள்ள ஜராகோசில் சிவில் காவலர் முகாம்களில் நடந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 11 கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் Josu Ternera-விற்கு தொடர்பிருப்பதாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார்.

2002 ஆம் ஆண்டு முதல் Josu Ternera தலைமறைவாக இருந்து வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு யூன் 1ம் திகதி தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்காக பாரிஸ் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில், பிரான்ஸ்-ஸ்பெயின் இரு நாட்டு அதிகாரிகளும் கூட்டாக நடத்திய தேடுதல் வேட்டையின் பலனாக 68 வயதான Josu Ternera பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்