பிரான்சில் 90 வயது தாயை கொலை செய்த பிரித்தானியர் கைது!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் வசித்து வரும் பிரித்தானியர் ஒருவர் தனது 90 வயது தாயை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Vivian Hart (90) என்னும் பிரித்தானிய பெண்மணி முகத்தில் காயங்களுடன் கிடப்பதைக் கண்ட அந்த வீட்டில் வேலை செய்யும் பெண், பொலிசாருக்கு தகவலளித்தார்.

பொலிசாருடன் வந்த மருத்துவ உதவிக் குழுவினர் Vivianஐ காப்பாற்ற எடுத்த முயற்சிகள் வெற்றி பெறாமல் அவர் உயிரிழந்தார்.

இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பொலிசார் Vivianஇன் மகனான Russel Hart (65) என்பவரை கைது செய்துள்ளனர்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள அவருக்கு மன நல பிரச்சினைகள் ஏதாவது இருக்குமோ என்று அறிவதற்காக அவர் Perpignanஇலுள்ள மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Vivian, Trausse பகுதியில் 2001இலிருந்து 2008வரை கவுன்சிலராக பணியாற்றியதால் அப்பகுதியில் நன்கறியப்பட்டவராவார்.

உள்ளூர் நூலகத்தில் சேவை செய்ததோடு, Vivian தனது வீட்டில் வைத்து இலவசமாக ஆங்கிலமும் கற்றுக் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்