பிரான்சில் தோல்வியில் முடிந்த 6வது மாத மஞ்சள் மேலாடை போராட்டம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் நேற்று நடந்த மஞ்சள் மேலாடை போராட்டம் தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் மேலாடை போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து, பிரான்சில் நேற்றைய தினம் மிக குறைந்த அளவிலேயே போராளிகள் பங்கேற்றிருந்தனர். அதாவது நாடு முழுவதும் பிரான்சில் 15,000 பேர் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிய வருகிறது.

குறிப்பாக தலைநகர் பாரிசில் 1,600 பேர் மட்டுமே கலந்துகொண்டிருந்ததாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த எண்ணிக்கை குறைந்துகொண்டே வருதாக தெரிகிறது.

ஆனால், நேற்றைய தினம் போராட்டம் ஆரம்பிக்கும் முன்னர், மிக அதிகளவான போராளிகளை திரட்டி போராட்டம் செய்ய ஏற்பாட்டாளர்கள் திட்டம் வகுத்திருந்தனர்.

கடந்த 26வது வார ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் 18,600 பேர் கலந்துகொண்டிருந்த நிலையில், இந்த வாரம் மிகக்குறைந்த அளவு போராளிகளே கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்ட நேற்றைய தின போராட்டம் தோல்வியில் முடிந்ததாக அறிய முடிகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்