மூடப்பட்டது ஈபிள் கோபுரம்.. சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்: என்ன நடக்கிறது பாரிஸில்?

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் அடையாள சின்னமாக திகழும் ஈபிள் கோபுரம் மூடப்பட்டு, அங்கிருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஈபிள் கோபுரத்தின் மீது நபர் ஒருவர் ஏறியதை அடுத்து ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது என கோபுரத்தை செயல்படுத்தி வரும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோபுரத்தின் மேல் நபர் ஒருவர் ஏறுவதை கண்டோம், அவரை தடுக்க வேண்டியது எங்களின் கடமை. அதன் காரணமாகவே ஈபிள் கோபுரம் மூடப்பட்டது, இது வழக்கமான நடைமுறை தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈபிள் கோபுரத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈபிள் கோபுரம் தற்போது மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பார்வையாளர்கள், அவர்களுடைய விஜயத்தை ஒத்திவைக்கமாறு கேட்டுக்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், கோபுரத்தின் மேலிருக்கும் நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும், தற்போது வரை கோபுரத்தில் மீது ஏறியதற்கான காரணம் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள நிலையில், மக்கள் இப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்