கிராம மக்களுக்கு இலவசமாக வயாக்ரா வழங்கும் பிரெஞ்சு மேயர்: காரணத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

குழந்தைகள் இல்லாத ஒரு கிராமம் தனது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கும் கிராமத்திற்கு ஒப்பானது என்று கூறும் ஒரு பிரெஞ்சு மேயர், தனது கிராமத்தில் குழந்தைகள் வேண்டும் என்பதற்காக மக்களுக்கு இலவசமாக வயாக்ரா மாத்திரைகளை வழங்க முன்வந்துள்ளார்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம், Montereau என்ற அவரது கிராமத்திலிருக்கும் ஒரு பள்ளிதான்.

தனது கிராமத்திலிருக்கும் பள்ளிக்கு போதுமான மாணவர்கள் வராவிட்டால், அது மூடப்படும் என்பதாலேயே Montereau கிராம மேயரான Jean Debouzy இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

தனது கிராமத்தில் வசிக்கும் 18 முதல் 40 வயது உள்ள தம்பதிகளுக்கு வயாக்ரா மாத்திரைகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ள Debouzy, அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், பள்ளிகளுக்கு மாணவர்கள் வர வேண்டும், பள்ளிகள் மூடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்.

ஆனால் இதுவரை ஒருவர் கூட தனது அலுவலகத்திற்கு மாத்திரைகளை கேட்க வரவில்லை என்று கூறும் Debouzy, தானும் இதுவரை மாத்திரைகளை வாங்கி ஸ்டாக் வைக்கவில்லை என்கிறார்.

பிரான்சைப் பொருத்த வரையில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே வயாக்ரா மாத்திரைகளை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது என்பதால் மாத்திரைகளை வாங்க Debouzy என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை.

தனது நோக்கம் பள்ளி மூடப்படக்கூடாது என்னும் எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்துவதுதான் என்கிறார் Debouzy.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்