பிரான்ஸ் நாட்டில் தொடரும் பதற்றம்... மர்ம பார்சலை தேடும் அதிகாரிகள்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் நேற்று நடந்த பார்சல் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, லியோன் நகரில் தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது.

தென்கிழக்கு பிரான்ஸின் லியோனின் பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்த தெரு ஒன்றில் நேற்று பார்சல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 13 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிசார், சந்தேக நபரின் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பொலிசார், தாக்குலுக்கு உள்ளான லியோன் நகரின் மத்திய பகுதியை சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், மத்திய பகுதியில் உள்ள தெருகளில் சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் இருக்கிறதா என தேடி வருகின்றனர். இதனால், லியோன் நகரில் தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers