பிரான்சில் வித்தியாசமான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவு நர்ஸ்கள் !

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சிலுள்ள பல மருத்துவமனைகளில் பணிபிரியும் அவசர சிகிச்சை பிரிவு நர்ஸ்கள் திடீரென வெளிநடப்பு செய்தனர்.

போதுமான பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று அவர்கள் ஐந்து நிமிட அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

குறைந்த பணியாளர்களுடன் அதிக வேலையில் ஈடுபடுவது தங்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு நோயாளிகளையும் அபாயத்திற்குள்ளாக்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசின் கவனத்தை ஈர்த்து, இதை அரசுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த ஐந்து நிமிட அடையாள வேலை நிறுத்தத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

மேற்கு பிரான்சிலுள்ள Nantesஇல் சுமார் 60 மருத்துவமனை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அது நோயாளிகளை பாதிக்கும் என்பதாலேயே முழு நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் இப்படி ஐந்து நிமிட அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும், இது தங்கள் நோயாளிகள் மீது தாங்கள் வைத்திருக்கும் அக்கறையையும், பணி மீதான தங்கள் அர்ப்பணிப்பையும் காட்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிரம்பி வழியும் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் தங்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 21 மில்லியனை எட்டியிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Agnès Buzyn, வரும் ஆண்டுகளில் 400 புதிய அவசர சிகிச்சை பிரிவு ஊழியர்களை பணியமர்த்தும் திட்டத்தை அரசு முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers