இல்-து-பிரான்சில் சுட்டெரிக்கும் வெயில்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் இல்-து-பிரான்சில் சுட்டெரிக்கும் வகையில் வெயில் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இன்றைய தினம் சீரான வெயில் தங்கு தடையின்றி நிலவும் எனவும், இல்-து-பிரான்சுக்குள் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தலைநகர் பாரிஸ், Cergy, Etampes மற்றும் Melun ஆகிய நகரங்களில் இன்று காலையிலேயே 20 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவும் என்றும், நண்பகலில் இந்நகரங்களில் 28 டிகிரி செல்சியஸ்-ஐ தொடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக வெப்பநிலையானது 30 டிகிரி செல்சியஸில் இருந்து, 32 டிகிரி செல்சியஸ் வரை இன்று பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் நாளைய தினம் இதேபோன்ற வெப்பம் நிலவும், இல்-து-பிரான்சுக்குள் சராசரி வெப்பமாக 30 டிகிரி செல்சியஸ் நிலவும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

எனினும், வரும் திங்கட்கிழமை பாரிசுக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வார இறுதி நாட்களில் நிலவும் சீரான வெப்பம் தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அந்நகர மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்